FAQ
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் — தேர்ந்தெடுத்த மொழியில்.
Choose your language to explore our frequently asked questions.
ஆவணப் பதிவுக்கு நீங்கள் என்னென்ன உதவிகள் செய்வீர்கள்?
உங்களிடம் உள்ள ஆவணங்களை வழங்கினால் போதும். எங்கள் சட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவின் மூலம் சட்டரீதியான ஆய்வு மற்றும் Legal Report தயாரித்தல், தேவையான பட்டா / TSLR, EC, FMB வரைபடம் பெறுதல், ஆவணம் எழுதுதல், ஆன்லைன் பதிவேற்றம், டோக்கன் மற்றும் பதிவு நடைமுறைகள் வரை நாங்களே கவனித்துக்கொள்வோம். உங்களுக்கு வசதியான நேரத்தை முன்கூட்டியே பேசி ஏற்பாடு செய்வோம்.
தமிழ்நாடு முழுவதும் ஆவணப் பதிவு செய்து தருவீர்களா?
ஆம். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆவணப் பதிவு சேவைகளை வழங்குகிறோம். தேவையான ஆவணங்களை WhatsApp அல்லது Email மூலம் அனுப்பலாம். சரிபார்ப்பு மற்றும் முன் ஏற்பாடுகளுக்குப் பிறகு, எங்கள் நிபுணர் குழுவினர் உங்கள் மாவட்டத்திற்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு நடைமுறைகளை ஒருங்கிணைத்து முடித்துக் கொடுப்பார்கள்.
பதிவு அலுவலகத்திற்கு நான் வர வேண்டுமா?
நேரில் வருகை தேவைப்படும் பதிவுகளில், சார்-பதிவாளர் முன்னிலையில் ஒப்புதல் தெரிவித்து, கையொப்பம் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வர வேண்டும். முன்கூட்டிய ஏற்பாடுகளை நாங்கள் கவனித்துக்கொள்வோம்.
Paperless மற்றும் Presenceless பதிவுகளுக்கு என்ன வித்தியாசம்?
Paperless முறையில் ஆவணங்கள் டிஜிட்டலாகச் சமர்ப்பிக்கப்படும்; ஒப்புதல் மற்றும் பயோமெட்ரிக் நடைமுறைகளுக்கு சார்-பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். Presenceless வசதி பொருந்தும் பதிவுகளில், அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் பதிவு செய்யும் நடைமுறையைப் பயன்படுத்தலாம். உங்கள் ஆவணத்திற்கு எந்த முறை பொருந்தும் என்பதைச் சரிபார்த்து வழிகாட்டுவோம்.
எனது இடத்திற்கே வந்து உதவி செய்வீர்களா?
ஆம். சொத்து அளவீடு, பட்டா / TSLR விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் GPS புகைப்படங்கள் எடுத்தல் ஆகிய பணிகளுக்கு எங்கள் நிபுணர் குழுவினர் உங்கள் சொத்து அமைந்துள்ள இடத்திற்கு நேரில் வருவார்கள். Presenceless வசதி பொருந்தும் பதிவுகளுக்கும் உங்களுக்கு வசதியான இடத்திற்கு வந்து உதவுவோம். வருகைக்கான இடமும் நேரமும் முன்கூட்டியே உறுதிசெய்யப்படும்.
எனது ஆவணங்களை உங்களிடம் எப்படி வழங்கலாம்?
உங்கள் ஆவணங்களை WhatsApp அல்லது Email மூலம் அனுப்பலாம்; அலுவலகத்திற்கு நேரிலும் கொண்டுவந்து வழங்கலாம். சேலம் நகர எல்லைக்குள், எங்கள் குழுவினர் உங்கள் இடத்திற்கு நேரில் வந்தும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்வார்கள். ஆவணங்களை நேரில் வந்து பெற்றுக்கொள்வதற்குத் தனிக் கட்டணம் இல்லை.
சொத்து தொடர்பான Legal Report பெற்றுத் தருவீர்களா?
ஆம். எங்கள் சட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவின் மூலம் உங்கள் சொத்து ஆவணங்களைச் சட்டரீதியாக ஆய்வு செய்து, தேவையான Legal Report-ஐ நாங்களே தயாரித்து வழங்குவோம்.
திருமணப் பதிவுக்கும் உங்கள் இடத்திற்கே வருவீர்களா?
திருமணப் பதிவு சார்-பதிவாளர் அலுவலகத்தில்தான் நடைபெறும். தேவையான ஆவணங்கள், விண்ணப்பம் மற்றும் முன் ஏற்பாடுகளை நாங்கள் கவனித்துக்கொள்வோம். மணமக்களும் தேவையான சாட்சிகளும் நேரில் வர வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
நீங்கள் பெற விரும்பும் சேவை மற்றும் ஆவணத்தின் தன்மைக்கு ஏற்ப தேவைகள் மாறும். எங்களைத் தொடர்புகொண்டால், உங்கள் தேவைக்கான ஆவணப் பட்டியலைத் தெளிவாக வழங்குவோம். பதிவுக்குத் தேவையான பட்டா / TSLR, EC மற்றும் FMB வரைபடத்தை நாங்களே பெற்றுக்கொள்வோம்; அதற்கான சொத்து விவரங்களையும் தேவையான ஆதாரங்களையும் வழங்கினால் போதும்.
பதிவு அல்லது விண்ணப்பம் முடிவடைய எவ்வளவு காலம் ஆகும்?
சேவையின் வகை, ஆவணங்களின் முழுமை, அரசு சரிபார்ப்பு மற்றும் நேர ஒதுக்கீட்டைப் பொறுத்து காலம் மாறும். உங்கள் விவரங்களைப் பார்த்த பிறகு எதிர்பார்க்கப்படும் காலத்தைத் தெரிவிப்போம்.
உங்களை எப்படித் தொடர்புகொள்ளலாம்?
9843026112 / 7338802260 என்ற எண்களில் அழைக்கலாம் அல்லது WhatsApp மூலம் தொடர்புகொள்ளலாம். Email: [email protected]. அலுவலக நேரம்: திங்கள்–வெள்ளி காலை 9:00–இரவு 8:00; சனிக்கிழமை காலை 9:00–மாலை 5:00; ஞாயிறு விடுமுறை.
மேலும் உதவி தேவையா? எங்கள் குழுவினருடன் பேசுங்கள்.
98430261127338802260Google வாடிக்கையாளர் கருத்துகள் ↗What support do you provide for document registration?
Once you share your available documents, we handle the legal review and report through our legal advisory team, obtain the required Patta / TSLR, EC and FMB map, and coordinate drafting, online submission, token booking and registration. We discuss a convenient schedule with you in advance.
Do you provide document registration services across Tamil Nadu?
Yes. We provide document registration services across all districts of Tamil Nadu. You can share the required documents through WhatsApp or email. After verification and preparation, our expert team travels to your district and coordinates the registration at the relevant Sub-Registrar Office.
Do I need to visit the registration office?
For registrations requiring your presence, you need to visit the Sub-Registrar Office to give your declaration and complete the required signatures and biometric verification. We take care of the preparations in advance.
What is the difference between Paperless and Presenceless registration?
Paperless registration uses digital document submission; a visit to the Sub-Registrar Office is still required for the declaration and biometric process. For registrations eligible for Presenceless processing, the procedure can be completed without visiting the office. We check which process applies to your document and guide you accordingly.
Can your team visit my location?
Yes. Our expert team visits your property for measurement, verification of Patta / TSLR details and GPS photographs. We also provide assistance at a convenient location for registrations eligible for Presenceless processing. The visit location and time are confirmed with you in advance.
How can I share my documents with you?
You can send your documents through WhatsApp or email, or bring them to our office. Within Salem city limits, our team can also visit your location to collect the documents. There is no separate charge for this document collection service.
Do you provide legal reports for property documents?
Yes. Our legal advisory team reviews your property documents and prepares the required legal report.
Is doorstep registration available for marriages?
Marriage registration takes place at the Sub-Registrar Office. We handle the required document preparation, application and prior arrangements. The couple and the required witnesses must attend in person.
Which documents will I need?
Requirements depend on the service and the nature of your document. Contact us for a checklist specific to your needs. We obtain the Patta / TSLR, EC and FMB map required for your registration; you only need to provide the relevant property details and supporting documents.
How long will my registration or application take?
The time required depends on the service, document completeness, government verification and appointment availability. After reviewing your details, we explain the expected timeline.
How can I contact you, and what are your office hours?
Call or WhatsApp us on 9843026112 / 7338802260, or email [email protected]. Office hours: Monday–Friday, 9:00 AM–8:00 PM; Saturday, 9:00 AM–5:00 PM. Closed on Sundays.